search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டதி பள்ளி"

    • இன்று முதல் அமலுக்கு வந்தது
    • 10 நாட்களுக்குள் பணியை முடிக்க திட்டம்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்க டியை குறைக்க மாநகராட்சி நிர்வாகமும் போக்குவரத்து போலீசாரும் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக பகுதியில் ரவுண்டானா அமைக்கும் பணி நடந்து வருகிறது.மேலும் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் இருந்து வெட்டூர்ணிமடம் செல்லும் சாலை விரி வாக்கம் செய்யப்பட்டு இரு வழிப்பாதையாக மாற்ற வும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் டதி பள்ளி சந்திப்பில் இருந்து வேப்ப மூடு வரை உள்ள சாலையை விரிவாக்கம் செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. மேயர் மகேஷ் அந்த சாலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து சாலை விரிவாக்க பணி மற்றும் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த ரூ1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. டதி பள்ளி சந்திப்பு பகுதியில் வாகனங்கள் நிறுத்த ஏதுவாக மணல்கள் நிரப்பப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சாலையில் உள்ள நடை பாதையை அகற்றிவிட்டு கழிவுநீர் ஓடையின் மேல் நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதனால் ஏற்கனவே இருந்த நடைபாதையை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.

    ஜே.சி.பி. எந்திரம் மூல மாக நடைபாதைகள் இடிக் கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் நேற்று போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.இந்த நிலையில் வேப்ப மூட்டில் இருந்து டதி பள்ளி செல்லும் சாலையில் போக்குவரத்து இன்று முதல் மாற்றப்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று அதி காலை முதலே பஸ் போக்கு வரத்து உள்பட அனைத்து போக்குவரத்தும் மாற்றப்பட்டது. கன்னியா குமரியிலிருந்து வடசேரி பஸ் நிலையத்திற்கு செல் லும் அனைத்து பஸ்களும் செட்டிகுளத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக திருப்பி விடப் பட்டது. இதனால் செட்டி குளம் கலெக்டர் அலுவலக பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    போக்குவரத்து போலீசார் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். வேப்பமூடு டதி பள்ளி சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இந்த சாலையில் செல்லாமல் இருக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைத்து மூடப் பட்டு இருந்தது.போக்கு வரத்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர்.

    ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் சாலை சீர மைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியை குறுகிய காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.நடை பாதை இடித்து அப்புறப் படுத்தப்பட்டதை யடுத்து கழிவு நீர்ஒடையின் மேல் நடைபாதை அமைக்கப்ப டுகிறது. இதனால் சாலை விசாலமாக காட்சியளிக்கி றது.

    இதையடுத்து சாலையை இரு வழி பாதையாக மாற்று வது தொடர்பாகவும் போக்குவரத்து போலீசாரும் மாநகராட்சி நிர்வாகமும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

    இந்தச் சாலை இருவழிச் சாலையாக மாற்றப்படும் பட்சத்தில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி குறைய வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் தெரிவித்துள்ளனர்.இந்த சாலை பணியை 10 நாட்க ளுக்குள் முடிக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது.

    • பேரணி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி டதி பள்ளி எஸ்.எல்.பி. பள்ளி வேப்பமூடு வழியாக முதன்மை கல்வி அலுவலகத்தை வந்தடைந்தது.
    • பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் அவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய அதிநவீன வாகனத்தில் அமைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியை மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    வாகனத்தில் இருந்த வ.உ. சிதம்பரனார் சிலைக்கு கலெக்டர்அரவிந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து நடந்த பேரணி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி டதி பள்ளி எஸ்.எல்.பி. பள்ளி வேப்பமூடு வழியாக முதன்மை கல்வி அலுவலகத்தை வந்தடைந்தது.

    பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த வர்கள் கலந்துகொண்ட னர். பேரணியில் கலந்து கொண்ட வர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு வந்தனர்.

    நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா,ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×